யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம்! உள்ளூர்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம்!

  • January 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வரைவினை, ஆசிய அபிவிருத்தி குழுவுடன் இணைந்து,அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்🔹 நூலக சேவைகள் நவீனமயமாக்கல்🔹 தகவல் தொழில்நுட்ப வசதிகள் மேம்பாடு🔹 மின்னூலக (Digital Library) சேவைகள்🔹 வாசகர் மற்றும் சமூக அடிப்படையிலான அறிவுப் பரப்பல் ஆகியவற்றில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் புதிய உயர்வுகளை நோக்கி முன்னேறுகிறது. 📖 அறிவின் ஒளி – சமூகத்தின் வலிமை.

யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் அநுர உள்ளூர்

யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் அநுர

  • January 15, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைப்பொங்கல் திருநாளான இன்று(15.01.2026) வடக்கு மாகாணத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் அவர் கொன்னையன் குடியிருப்பு காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறஙுகளின் குரல்கள்” உள்ளூர்

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்”

  • January 15, 2026
  • 0 Comments

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்” 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையிலுள்ள தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கல்கள், திட்டமிட்ட ஒடுக்குமுறை மற்றும் அரசால் ஆதரிக்கப்படும் வன்முறைகள் ஆகியலற்றிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசின் உருவாக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே, பாகுபாடான சட்டங்கள், அரசியல் விலக்கம், இராணுவமயமாக்கல் மற்றும் வன்முறை ஆகியவற்றின் மூலம் தமிழர்கள் மெதுவாகவும் திட்டமிட்டும் புறக்கணிக்கப்பட்டனர். பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்தக் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள், […]