ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணம்இ டிசெம்பர் 08 இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜன நாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பில் நேற்றுக் கூடிப் பேசின. இதன்போது, மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாக அறிய வருகிறது. இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள அந்தக் கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பேச்சு நடைபெற்றது. நேற்றைய சந்திப்பில் இரு தரப்பும் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து […]