உள்ளூர்

மாவீரர் தினம்

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை பேணி வந்தனர்.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (23) மன்னார் புகையிரத வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் ப.குமார் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

admin

About Author

Leave a comment

You may also like

உள்ளூர்

கரவெட்டி இளைஞனை காணவில்லையெனகுடும்பத்தினர் முறைப்பாடு

செல்வாபுரம் கரணவாய் தெற்கு கரவெட்டி எனும் முகவரியில் வசிக்கும் சந்திரசேகரம் (சந்திரமோகன்) (NIC-871273766) என்பவரை 09/02/2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர்
உள்ளூர்

சீரற்ற வானிலை காரணமாக யாழில் 10 ஆயிரத்து 5 குடும்பங்கள் பாதிப்பு!

  • November 30, 2025
யாழ்ப்பாணம், நவ.3. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10,005 குடும்பங்களைச் சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது. நேற்று