ஆசிய நாடுகளில் பரவும் நிபா வைரஸ் – ஆபத்து தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை
ஆசிய நாடுகளில் பரவி வரும் ஆபத்தான நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையங்கள் மற்றும் குடிவரவு மையங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிபா வைரஸ்
உலகின் மிக அபாயகரமான 10 வைரஸ்களில் ஒன்றாக நிபா வைரஸினை உலக சுகாதார நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.இந்த வைரஸிற்கு இதுவரை முறையான தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது மட்டுமே ஒரே வழி என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது பழங்களை உண்ணும் வௌவால்கள் மூலம் பரவுவதாக கூறப்படுகின்றது. இந்த தொற்று ஏற்பட்ட 4 முதல் 14 நாட்களுக்குள் இதற்கான அறிகுறிகள் தென்படும் என வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் எச்சரிக்கை
இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 40 முதல் 75 சதவீதம் வரையிலானோர் மரணமடையும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.



