உள்ளூர்

நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி, ஜனாதிபதி நேரில் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நயினாதீவுக்கு சென்று, நாக விகாரை விகாராதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் (16)  ஜனாதிபதி விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதேவேளை, தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால், விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக, தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்றுக் காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு வழங்கத் தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன், தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Jestin George

About Author

Leave a comment

You may also like

உள்ளூர்

கரவெட்டி இளைஞனை காணவில்லையெனகுடும்பத்தினர் முறைப்பாடு

செல்வாபுரம் கரணவாய் தெற்கு கரவெட்டி எனும் முகவரியில் வசிக்கும் சந்திரசேகரம் (சந்திரமோகன்) (NIC-871273766) என்பவரை 09/02/2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர்
உள்ளூர்

மாவீரர் தினம்

  • November 27, 2025
இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர்