யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைப்பொங்கல் திருநாளான இன்று(15.01.2026) வடக்கு மாகாணத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் அவர் கொன்னையன் குடியிருப்பு காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.




