அரசியல்

தமிழ் அரசு, ஜ.த.தே. கூட்டணி இணைந்து செயல்பட பேச்சு!

  • மாகாண தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கவும் முடிவு.
  • புதிய அரசமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம்இ டிசெம்பர் 08 இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜன நாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பில் நேற்றுக் கூடிப் பேசின. இதன்போது, மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாக அறிய வருகிறது.

இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள அந்தக் கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பேச்சு நடைபெற்றது. நேற்றைய சந்திப்பில் இரு தரப்பும் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து பேசப்பட்டது. அத்துடன்இ தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வு, புதிய அரசமைப்பு விவகாரம் தொடர்பில் பேசப்பட்டன. அத்துடன், மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது குறித்தும் பேசப்பட்டன.

இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வு, புதிய அரசமைப்பு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படாத போதிலும் ஏற்கனவே இணைந்து செயல் பட்டபோது எட்டப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தொடர்ந்தும் பேச்சுகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக பங்கேற்ற கட்சிகளில் ஒன்றின் தலைவர் குறிப்பிட்டார்.

நேற்றைய இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ்வின் சுரேஷ் க. பிறேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. நவீந்திரா (வேந்தன்), சமத்துவ கட்சியின் தலைவரான மு. சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

admin

About Author

Leave a comment